உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பி.கொசவபட்டியில் மீன்பிடி திருவிழா

பி.கொசவபட்டியில் மீன்பிடி திருவிழா

வடமதுரை : வடமதுரை அருகே மக்களிடம் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் பி.கொசவபட்டியில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.பி.கொசவபட்டியில் 45 ஏக்கரில் உள்ள புல்லவாடன்செட்டிகுளம் 17 ஆண்டுகளுக்கு பின் 2023ல் நிரம்பி மறுகால் பாய்ந்தது. குளம் மறுகால் பாய்ந்தால் மீன்பிடி திருவிழா நடத்துவது கிராமங்களில் ஐதீகமாக உள்ளது. தற்போது குளத்தில் நீரின் அளவு குறைந்ததை தொடர்ந்து கிராமத்தினர் சார்பில் மீன்பிடி திருவிழா அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேற்று காலை கரைப்பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்ய ஊர் பெரியதனக்காரர் செல்வராஜ் வெள்ளைத்துண்டை வீசி துவக்கி வைத்தார். கரையோரம் காத்திருந்தவர்கள் உற்சாகத்துடன் குளத்திற்குள் இறங்கி மீன்களை பிடித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !