உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வண்டியோடு வாங்க... உரங்களை அள்ளிட்டு போங்க...

வண்டியோடு வாங்க... உரங்களை அள்ளிட்டு போங்க...

திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சி நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட 200 டன் இயற்கை உரங்களை விவசாயிகள் வண்டியுடன் வந்து எப்போது வேண்டுமானாலும் இலவசமாக எடுத்து செல்லலாம் என மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.திண்டுக்கல் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் மக்கும்,மக்காத குப்பை என தரம்பிரித்து மக்கும் குப்பை மூலம் இயற்கை உரம் தயாரிக்கின்றனர். மக்காத குப்பையை தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுப்புகின்றனர். நுண் உர செயலாக்க மையங்களில் தற்போது 200 டன் இயற்கை உரம் தயாரிக்க இதை மக்களும் ஆர்வத்துடன் இலவசமாக வாங்கி சென்று மாடிதோட்டத்திற்கு பயன்படுத்துகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் இதை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வாங்க விரும்பும் விவசாயிகள் 96889 21848ல் தொடர்பு கொண்டு உரத்தை வண்டியுடன் வந்து பெற்று செல்லலாம் என மாநகராட்சி நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை