உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு அழைப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு அழைப்பு

திண்டுக்கல்: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- செப்டம்பர், அக்டோபரில் மாவட்டம், மண்டலம், மாநில அளவில் நடக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ,மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடக்க உள்ளன.வயது வரம்பு பள்ளி மாணவர்களுக்கு 12 முதல் 19 , கல்லுாரி மாணவர்களுக்கு 17 முதல் 25, மாற்றுத்திறனாளிகள் அனைத்து வயது பிரிவினர், 15 முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினர், அந்தந்த மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளலாம்.கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் CM Trophy 2024 - Online Registration- Player Login - ல் ஆக. 25 க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியிலோ, 74017 03504 ல் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை