உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார், லாரி மோதல்: இருவர் காயம்

கார், லாரி மோதல்: இருவர் காயம்

வேடசந்துார், ; கரூர் சின்ன ஆண்டாங்கோயில் ரோட்டை சேர்ந்தவர் தனியார் நிறுவன உரிமையாளர் சங்கர் 44. இவர் தனது மனைவி தமிழ் செல்வமாரியுடன், சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் குலதெய்வ கோயிலுக்கு சென்று மீண்டுவம் திண்டுக்கல் வழியாக காரில் கரூர் நோக்கி சென்றனர். கார் வேடசந்துார் ரங்கநாதபுரம் அருகே வந்தபோது அதே திசையில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில் கார் நொறுங்கி சங்கர்,தமிழ் செல்வமாரி இருவரும் காயமடைந்தனர். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் குருக்கல்பட்டியை சேர்ந்த மணிகண்டன்,மீது கூம்பூர் எஸ்.ஐ., திலீப்குமார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ