உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பச்சை நிறத்தில் வரும் குடிநீர் பழநி நகராட்சி கூட்டத்தில் புகார்

பச்சை நிறத்தில் வரும் குடிநீர் பழநி நகராட்சி கூட்டத்தில் புகார்

பழநி: பழநியில் சப்ளையாகும் குடிநீர் பச்சை நிறத்தில் வருவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறினர்.பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி,நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரன்,உதவி பொறியாளர் பாண்டித்தாய், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், வருவாய் அலுவலர் உமா கணபதி முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்

தீனதயாளன் (தி.மு.க.,): தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன் சாக்கடைகளை துார் வாரவேண்டும்.சுகாதார அலுவலர்: நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .மகேஸ்வரி (தி.மு.க.,): நாய் தொல்லை அதிகம் உள்ளது.ஜென்னத்துல் பிரதொஷ் (அ.தி.மு.க.,): பட்டத்து விநாயகர் கோயில் சாலையில் சிறு பாலம் அமைத்து தரவேண்டும்.உதவி பொறியாளர் : விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.காளீஸ்வரி (தி.மு.க.,): சாக்கடை துார் வரப்பட்டு உள்ள நிலையில் சில இடங்களில் சேதமடைந்துள்ளது .சாகுல் ஹமீது (தி.மு.க.,): பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை ஆன்லைனில் பதிவு செய்யவில்லை .இதை சரி செய்ய அடிக்கடி பணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டியது உள்ளது.சாகுல் ஹமீது (தி.மு.க).,: குடிநீர் பச்சை நிறத்தில் வருகிறது. மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.முருகேசன் (வி.சி.க.,): பழைய தாராபுரம் சாலையில் சாக்கடை சரியாக இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.தலைவர்: சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்செபாஸ்டின் (தி.மு.க.,): நகராட்சி தீர்மானங்கள் முன்னதாகவே வலைதளங்களில் தலைவர் கையொப்பமின்றி உலா வருகிறது. வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி கூட்டம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு முறையாக தகவல் அளிப்பதில்லை.உதவி பொறியாளர் : இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் சரி செய்யப்படும்சுரேஷ் (தி.மு.க.,): நகராட்சி சார்பில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும். சண்முக நதி அருகே அமைக்கப்பட்டுள்ள எரிவாயு மயானத்திற்கு சுற்றுச்சுவர் முகப்பு வளைவு அமைக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை