உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடுமையிலும் கொடுமை; காஸ் சப்ளையில் விலையை விட ரூ. 50 கூடுதல் வசூல்;

கொடுமையிலும் கொடுமை; காஸ் சப்ளையில் விலையை விட ரூ. 50 கூடுதல் வசூல்;

25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கிராமங்களில் பெரும்பாலானோர் விறகு அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். மத்திய அரசு திட்டத்தின் மூலம் இலவசம், மானிய விலையில் வீடுகள் தோறும் சமையல் காஸ் சிலிண்டர்கள்,அடுப்புகள் வழங்க தற்போது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சமையல் காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. காஸ் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவிற்கு வந்துவிட்டது. இவர்களுக்கு காஸ் ஏஜன்சிகள் மூலம்டெலிவரி நபர்களால் வீடுகளுக்கே சென்று காஸ் விநியோகம் நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் சமையல் காஸ் 540 என்ற நிலையில் தற்போது ரூ.845 என விலை உயர்ந்துள்ளது. இக்கடுமையான விலை ஏற்றத்தால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் குடும்பத்தலைவிகள் செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் - காஸ் டெலிவரி செய்யும் நபர்கள் பில் தொகையை விட கூடுதலாக ரூ. 50முதல் 70 வரை கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். கேட்டால் இதை தான் காஸ் ஏஜன்சிகள் சம்பளமாக வழங்குவதாக கூறுகின்றனர். மேலும் கேள்வி கேட்டால் காஸ் வழங்குவதை வேண்டுமென்றே காலதாமதப்படுத்துகின்றனர். பில் தொகையை காட்டிலும் கூடுதலாக பணம் வசூல் செய்யும் ஏஜன்சிகளை கண்டறிந்து அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
ஏப் 25, 2024 17:29

அனைத்துமே நடந்து விட்டது தவறு நடந்தால் கமிஷன் , அதற்கு செலவு , அது முடிவதற்குள் அடுத்த ஆட்சி, அதே போன்று லஞ்சத்துக்கும் சட்டபூர்வமாக தொகை இப்போது வந்து விட்டது, அவர் கூறியது போல் இனி அதற்கும் ரசீது ஒன்றுதான் கொடுக்கவேண்டும்.. சில நாட்களில் அதுவும் வந்துவிடும் பிறகு வேறு என்ன வேண்டும்.... வந்தே மாதரம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை