உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை நடைமேடையில் இடையூறு ;பயணிகள் அவதி

கொடை நடைமேடையில் இடையூறு ;பயணிகள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி நடைமேடையில் கட்டுமான பொருட்கள் குவித்துள்ளதால் பயணிகள் தடுமாறுகின்றனர்.சுற்றுலா தலமாக உள்ள கொடைக்கானல் நகரின் இருதயமாக உள்ளது ஏரி. 5. கி.மீ., தொலைவு உள்ள இந்த ரோட்டில் ஓராண்டாக ரூ. 24 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏரி நடைமேடை பணி மந்தகதியில் நடக்கிறது. இதற்கிடையே நடைமேடையில் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக கட்டுமான பொருள் பணி முடிந்த பகுதியில் குவித்துள்ளதால் காலை, மாலையில் நடைபயிற்சி ஈடுபடும் பயணிகள், உள்ளூர்வாசிகள் தடுமாறுகின்றனர். மேலும் கட்டுமான கழிவுகள் என அலங்கோல நிலையில் உள்ளதால் சைக்கிள் குதிரை சவாரி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். நடைமேடையை தவிர்த்து ரோட்டில் செல்லும் நிலையில் விபத்து அபாயம் உள்ளது. நகராட்சி இடையூறுகளை அகற்றி சீர் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ