உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டட செட்டில் தீ விபத்து

கட்டட செட்டில் தீ விபத்து

நத்தம்: நத்தம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 45.இவர் செல்லம்புதுார் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக அந்த பகுதியில் தற்காலிக செட் அமைத்து அதில் வீடு கட்ட தேவையான பொருட்களை வைத்துள்ளார். இதில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டு தீ பரவத் தொடங்கியது. தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன், உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். செட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை