உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரியாணி கடைகளில் குவியும் வெளிமாநில போலீசார்

பிரியாணி கடைகளில் குவியும் வெளிமாநில போலீசார்

திண்டுக்கல்: தேர்தல் பணிக்காக வெளி மாநிலத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த போலீசார் மதிய உணவு சாப்பிட கூட்டம் கூட்டமாக பிரியாணி கடைகளில் குவிகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 2 விஷயம் உலக அளவில் பேமஸாக உள்ளது. ஒன்று பூட்டு மற்றொன்று பிரியாணி. இங்குள்ள கடகைளில் தயாரிக்கப்படும் பிரியாணியை சாப்பிடுவதற்காக அசைவ பிரியர்கள் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இங்கிருக்கும் மாஸ்டர்களை அழைத்து சென்று தங்கள் பகுதியில் உள்ள சுப நிகழ்ச்சிகளிலும் உணவு சமைத்து சாப்பிடும் அளவிற்கு திண்டுக்கல் பிரியாணி பெயர் போன உணவாக கருதப்படுகிறது. ஏப்.19 ல் தேர்தல் நடக்க உள்ளநிலையில் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலம்,மாவட்டங்களை சேர்ந்த 4000 போலீசார் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர். இவர்கள் மதிய உணவிற்காக திண்டுக்கல்லில் உள்ள பெயர்போன பிரியாணி கடைகள் மட்டுமில்லாது எங்கெல்லாம் பிரியாணி விற்பனை நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று ரசித்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர். கூட்டம் கூட்டமாக போலீசார் குவிவதை பார்த்த ஓட்டல்கள் அதிகளவில் பிரியாணியை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை