உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் தொடரும் காட்டுத் தீ

கொடைக்கானலில் தொடரும் காட்டுத் தீ

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீயால் நான்கு நாட்களாக 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய நிலையில் நேற்று மின் சப்ளை சீரானது. கொடைக்கானல் வனப்பகுதியான பூம்பாறை, கூக்கால், மன்னவனுார் உள்ளிட்ட வனப்பகுதியில் ஒரு வாரமாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதில் ஏராளமான வனநிலங்கள் தீக்கிரையாகின. தீயை அணிக்கும் பணியில் நுாற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சென்ற உயர்மின்பாதையில் காட்டுத் தீ எரிந்ததால் மரங்கள் சாய்ந்தும், கட்டுக்கடங்காமல் எரிந்ததாலும் 2 கி.மீ., துாரத்திற்கு மின் ஒயர்கள் எரிந்து சேதமாயின.இதனால் மன்னவனுார், கவுஞ்சி, கிளாவரை, பூண்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் 4 நாட்களாக இருளில் மூழ்கி இருந்தன. மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையில் பணியாளர்கள் இரவு, பகலாக மின் பாதையில் ஏற்பட்ட இடையூறுகளை சீர் செய்தனர். காட்டுத்தீக்கு மத்தியில் மின்சப்ளையை சீர் செய்யும் பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று மாலை மன்னவனுார் முதல் கிளாவரை வரை மின்சப்ளையை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை