உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு குண்டாஸ்

கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: பஸ்சில் கஞ்சா கடத்திய வியாபாரிகள் இருவர் மீது குண்டர் சட்டத்தில் நடனவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விசாகப்பட்டினத்திலிருந்து திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் வடமதுரை அய்யலுார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசு பஸ்சில் பயணித்த திண்டுக்கல் சோலைக்கால் பகுதிகளை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் சுப்பிரமணி,மதன்குமார்,மதுபாலன்,மாதவன்,தாமரைக்கண்ணன்,ராஜா உள்ளிட்ட 6 பேரிடம் போலீசார் விசாரித்தனர். 30 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக பிரித்து திண்டுக்கல்லுக்கு கடத்தியது தெரிந்தது.அதன்படி போலீசார் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் எஸ்.பி.,பிரதீப் பரிந்துரையில் சுப்பிரமணி,மதன்குமார் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !