உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

கொடை யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சத்ய சாய் சுருதியில் குரு பூர்ணிமா விழா நாளை (ஜூலை 21) -நடக்கிறது. மனிதர்களுக்கு ஆசனாகவும், இறையாகவும் திகழும் குருவை போற்றி நன்றி கூறும் நாளாக குரு பூர்ணிமா தினம் உலகம் முழுவதும் சாய் பாபா பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. விழாவில் ஒம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், வேதபாராயணம், கொடியேற்றுதலுடன் தொடங்குகிறது. பஜனைகள், சத்சங்கம் , ஆராத்தி நடக்கிறது. விழாவில் வஸ்திரதானம் ,நாராயண சேவைகள் வழங்க உள்ளனர். ஏற்பாடுகளை தமிழ் நாடு சத்ய சாய் சேவா நிறுவன அங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி