உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோடையிலும் கொட்டித் தீர்க்கும் மழை: ஒரே நாளில் 148.10 மி.மீ., பதிவு

கோடையிலும் கொட்டித் தீர்க்கும் மழை: ஒரே நாளில் 148.10 மி.மீ., பதிவு

திண்டுக்கல் : கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 148.10 மி.மீ., பதிவாகி உள்ளது.மாவட்டத்தில் 2 மாதமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இந்நிலையில் மே 4ல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதன் மறுநாள் முதலே கோடை மழை பெய்யத் தொடங்கி விட்டது. அன்று முதல் இதுவரை மதியத்திற்கு மேல் மேகமூட்டம் சூழ காற்றுடன் மழை பெய்து வருகிறது.பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும் இரவு நேர மழை ஆறுதல் அளிக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் அநேக இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. அன்று ஒரு நாளில் 148.10 மி.மீ.,மழை பதிவானது. அதிகபட்சமாக நத்தத்தில் 60 மி.மீ., மழை பெய்துள்ளது. திண்டுக்கல்லில் 24.60, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 13.40, பழநி 10, நிலக்கோட்டை 4, வேடசந்துார் 1.5, புகையிலை ஆராய்ச்சி மையம் 1.5, காமாட்சிபுரம் 11.30, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 21.80 என மழையளவு பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை