உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹாக்கி போட்டியில் பங்கேற்க அழைப்பு

ஹாக்கி போட்டியில் பங்கேற்க அழைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கான ஹாக்கி போட்டிக்கு பங்குபெறும் அணிகள் பதிவு செய்யலாம்.திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் ,படேல் ஹாக்கி அகாடமி இணைந்து மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஹாக்கி போட்டிகள் மலைக்கோட்டை மைதானத்தில் நடக்கிறது. ஆக. 24,25 என இரு நாட்கள் நடக்கும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் ஆக.18 க்குள் மாவட்ட ஹாக்கி சங்க பொதுச்செயலர் சதீஷ் கண்ணாவை 97900 37911 ல் அணுகி பதிவு செய்து செய்து கொள்ளலாம். முதல் 4ம் இடம் பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை ,சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது. தங்குமிடம், உணவு போன்ற வசதிகள் வழங்கப்படும் என ஹாக்கி சங்க மாவட்ட தலைவர் காஜாமைதீன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி