உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சாணார்பட்டி: சாணார்பட்டி புதுஆவிளிப்பட்டி செல்வவிநாயகர், காளியம்மன், மாரியம்மன், கருப்பணசுவாமி கோயில்களில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் கோயில் முன் அமைக்கப்பட்ட யாக சாலையில் கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, தீபாராதனைகள், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து மேளதாளம் முழங்க திருமலை கேணி, அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேஸ்வரம், வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும்,புனித தீர்த்தமும், அன்னதானம் வழங்கப்பட்டது. தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னிவாடி: -கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கிராம தெய்வங்கள் வழிபாடு, கணபதி ஹோமம், கன்னி பூஜை, மூலிகை வேள்வியுடன் 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் முளைப்பாரி, மாவிளக்கு, பொங்கல் வழிபாடு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை