உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூலித்தொழிலாளி கொலை

கூலித்தொழிலாளி கொலை

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அங்கு பதட்டமான சூழல் நிலவ போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் சக்திவேல் 25. நடுப்பட்டியை சேர்ந்தவர் வேலு20.இருவரும் நேற்று முன்தினம் மாலை நடுப்பட்டியில் கட்டடத்திற்கு தண்ணீரை டிராக்டரில் கொண்டு வந்து ஊற்றினர். அப்போது நடுப்பட்டியை சேர்ந்த பெண்கள் தண்ணீர் பிடித்துள்ளனர். ஒரு இளம் பெண்ணிடம் சக்திவேல் அலைபேசி எண்ணை கேட்டுள்ளார். இதை அறிந்த வேலு சக்திவேலைப் பற்றி அவரது உரிமையாளரிடம் புகார் செய்தார்.உரிமையாளர் கிருஷ்ணன் சக்திவேலுவை கண்டித்து உள்ளார். ஆத்திரமடைந்த சக்திவேல் வேலுவை தாக்கினார். இதை தொடர்ந்து இரு தரப்பினர் தகராறில் ஈடுபட அழகு பாண்டி 30, சக்திவேல் காயமடைந்தார். இந்நிலையில் நடுப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ஆண்டாளை 55, சிலர் வெட்டியதில் இறந்தார். இரு கிராமங்களிலும் பதட்டம் நிலவ 100க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நிலக்கோட்டைதாசில்தார் தனுஷ்கோடி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆண்டாள் உறவினர்களுடன் நிலக்கோட்டையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., செந்தில்குமார் கூற மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ