உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைகளை கூறுவோம் - தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம் - தீர்வு காண்போம்

கழிவுநீர் தேக்கம்

ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டர் நகர் பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -சிவராஜ், ஒட்டன்சத்திரம்.

நடவடிக்கை எடுக்கப்படும்

ஒட்டன்சத்திரம் நல்லாக்கவுண்டர் நகரில் கழிவுநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.- -ரமேஷ் , நகராட்சி 14வது வார்டு கவுன்சிலர்,ஒட்டன்சத்திரம்.

ஆக்கிரமிப்புகள்

வடமதுரையில் திண்டுக்கல் ரோடு காணப்பாடி ரோடு பகுதிகளில் தார் ரோட்டின் மீதே மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்ததிற்கு இடையூறாக உள்ளது.- -கண்ணன், வடமதுரை.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக அளவீடு பணி முடிந்துள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.- -கந்தசாமி, சாலை ஆய்வாளர், வேடசந்துார்.

-------------- கழிவு நீர் வாய்க்கால்

கோம்பைப்பட்டி ஊராட்சி 1வது வார்டு பகுதியில் சிமென்ட் சாலை , சாக்கடை சேதமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைகின்றனர்.- -ரிச்வானா பானு, அய்யாபட்டி.

பணிகள் தொடங்கும்

கோம்பைப்பட்டி 1வது வார்டில் பேவர் பிளாக் சாலை, சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் பணிகள் தொடங்கும்.--ராசு, துணைத் தலைவர், கோம்பைபட்டி.

---------------------- துண்டிக்கப்பட்ட ரோடு

வேடசந்துார் நேருஜி நகர் பூங்கா ரோட்டை துண்டித்ததில் பள்ளம் உள்ளது. இதனால் டூவீலர் ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ரோட்டை சரி செய்ய வேண்டும்- -கணேசன், வேடசந்துார்

விரைவில் சரி செய்யப்படும்

கவனத்திற்கு வந்துள்ளது, விரைவில் சரி செய்து சிரமம் தவிர்க்கப்படும்- -மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை