ரோட்டில் ஓடும் கழிவுநீர்
பழநி வடக்கு ரத வீதியில் சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்து ரோட்டில் செல்கிறது. சாக்கடை அடைப்புகளை சரிசெய்து கழிவுநீர் ஓட்டத்தை சீர்படுத்த வேண்டும்.--பிரகாஷ், அடிவாரம், பழநி விரைவில் சரிசெய்யப்படும்
சாக்கடைகளில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதனால் தான் அடைப்பு ஏற்படுகிறது. விரைவில் சரிசெய்யப்படும்.--சுரேஷ், கவுன்சிலர், பழநி பயணத்தில் தடை
வடமதுரை பி.கொசவபட்டி காலனி தெரு செல்லும் சிமென்ட் ரோட்டின் குறுக்கே செல்லும் வடிகால் கட்டமைப்பில் பாலம் இல்லாததால் பெரும் பள்ளமாக உள்ளது. பாலம் கட்ட வேண்டும்.- -அழகர், வடமதுரை விரைவில் கட்டப்படும்
ஊராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு வந்ததும் பாலம் கட்டும் பணி துவங்கும்.-நாராயணன், ஊராட்சி தலைவர், பி.கொசவபட்டி. ஆக்கிரமிப்பால் அவதி
ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் நடமாடும் கடைகள், டூவிலர் நிறுத்தங்களால் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.-குமரேசன் ,ஒட்டன்சத்திரம். நடவடிக்கை எடுக்கப்படும்
ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.-திருமலைசாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம் பயன்பாடற்ற சுகாதார வளாகம்
தாண்டிக்குடி ஊராட்சி நுழைவுவாயிலில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இதனால் திறந்தவெளி கழிப்பிட போக்கு அதிகரித்துள்ளது. சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.- -பாண்டியன், தாண்டிக்குடி. விரைவில் நடவடிக்கை
சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.- -மகேஷ், ஊராட்சி தலைவர், தாண்டிக்குடி. வாகனங்களால் விபத்து
வேடசந்துார் வடமதுரை ரோடு, நேருஜி நகர் பூங்கா ரோடு பிரிவு ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களால்அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தடுக்க வேண்டும்.---பாவேந்தன், வேடசந்துார் நடவடிக்கை எடுக்கப்படும்
துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.- -மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார். வீணாகும் குடிநீர்
தருமத்துப்பட்டி அருகே கோம்பை ரோட்டில் தெருக்குழாய் திருகு இல்லாமல் பல இடங்களில் குடிநீர் வெளியேறுகிறது. குழாயை சரிசெய்து வீணாகும் குடிநீரை சேமிக்க வேண்டும்.-ஜெ.பழனிச்சாமி, தருமத்துப்பட்டி. விரைவில் நடவடிக்கை
குழாய் சீரமைப்பு பணி நடவடிக்கை விரைவில் துவங்கும்.- -மருதமுத்து, ஊராட்சி தலைவர், தருமத்துப்பட்டி. குறைந்த மின்னழுத்த பிரச்னை
கோம்பைபட்டி ஊராட்சி கே.அய்யாபட்டி 1வது வார்டு குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி குறைந்த மின்னழுத்த செயல்பாடு தொடர்கிறது.--சந்தோஷ், கே.அய்யாபட்டி. நடவடிக்கை எடுக்கப்படும்.
குறைந்த மின்னழுத்த பிரச்னை குறித்து மின்வாரிய பொறியாளர், அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சீரான மின்சப்ளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- -பாண்டி, ஊராட்சி வார்டு உறுப்பினர், கோம்பைப்பட்டி