உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்.

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்.

சேதமான ரோடு

மலைப்பட்டி செம்மனாம்பட்டி ரோட்டில் இருந்து கருங்கல்பட்டி செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ளது . வாகன விபத்து ஏற்பட்டு போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.--வெள்ளைச்சாமி, கொம்பேறிபட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்

ஒன்றிய நிர்வாக ஆலோசனைக்கு பின் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கையாக புதிய ரோடு அமைக்கப்படும்.--ராஜரத்தினம், ஊராட்சி தலைவர்,கொம்பேறிபட்டி.

சேதமடைந்த கழிப்பறை

தாண்டிக்குடி ஊராட்சி நுழைவு வாயிலில் உள்ள கழிப்பறை சேதமடைந்துள்ளது. சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.--கண்ணன், தாண்டிக்குடி.

விரைவில் சீரமைக்கப்படும்

தாண்டிக்குடி ஊராட்சி நுழைவு வாயிலில் உள்ள கழிப்பறையின் சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு விரைவில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.--மகேஸ், ஊராட்சி தலைவர், தாண்டிக்குடி

கசியும் கழிவுநீர்

பழநி கிழ்வடம்போக்கு தெருவில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.--ராஜேந்திரன், பழநி

விரைவில் சரிசெய்யப்படும்

குப்பையை சாக்கடைகளில் கொட்டும் போக்கை பொதுமக்கள் கைவிட வேண்டும். அதனால்தான் அடைப்பு ஏற்படுகிறது. விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.--சுரேஷ், கவுன்சிலர், பழநி.

வாகனங்களால் ஆக்கிரமிப்பு

ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் நடைபாதையை ஆக்கிரமித்து டூவீலர் வாகனங்கள் நிறுத்த படுகின்றன. இதனால் பயணிகளுக்கு பஸ் ஏறுவதில் சிரமம் ஏற்படுகிறது.--ஜான் பீட்டர், ஒட்டன்சத்திரம்.

விரைவில் நடவடிக்கை

பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.- -திருமலைசாமி , நகராட்சி தலைவர் ,ஒட்டன்சத்திரம்.

சேதமான சிக்னல் மையம்

வேடசந்துார் ஆத்துமேட்டில் போக்குவரத்து போலீசாருக்கான சிக்னல் மையம் லாரி மோதி விபத்தால்சேதமடைந்துள்ளது. உடனடியாக சீரமைத்து போக்குவரத்து சிக்னலை சரிசெய்ய வேண்டும்.- -பழனிமுருகன், வேடசந்துார்.

உடனடியாக சீரமைக்கப்படும்

சிக்னல் மையத்தை சீரமைத்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.--மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார்

தேங்கும் மழைநீர்

தருமத்துப்பட்டி அருகே போடம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை உயர்த்தியுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி தெருக்களில் தேங்குகிறது.-சுவாமிநாதன், தருமத்துப்பட்டி.

விரைவில் நடவடிக்கை

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.--மருதமுத்து, ஊராட்சி தலைவர், தருமத்துப்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை