விபத்து அபாயம்
நத்தம் பகுதி ரோடுகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.-மதுரை வீரன், நத்தம். நடவடிக்கை எடுக்கப்படும்
மாடுகளை சாலைகளில் திரிய விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.- -சின்னசாமி, செயல் அலுவலர்,நத்தம். பயமுறுத்தும் கழிவு நீர் மூடி
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோடு , திருவள்ளுவர் ரோடு சந்திக்கும் இடம் எதிரே சாக்கடை மூடி சேதம் அடைந்து விபத்தை ஏற்படுத்துகிறது.--திருமலை, ஒட்டன்சத்திரம். சீரமைக்கப்படும்
சாக்கடை மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.-- அம்சநிவேதா, நகராட்சி கவுன்சிலர் ,ஒட்டன்சத்திரம் . சுகாதார சீர்கேடு
பிலாத்து பெரிய குளத்திற்குள் குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.--மணிவேல், அய்யலுார். நடவடிக்கை எடுக்கப்படும்
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.- -கதிரேசன், ஊராட்சி செயலாளர், பிலாத்து. சுகாதார வளாகம் தேவை
அடுக்கம் ஊராட்சி பெருமாள் மலை சந்திப்பில் சுகாதார வளாகமின்றி இருபாலரும் திறந்த வெளியை நாடும் அவலம் உள்ளது.- -சிவா, பெருமாள்மலை. விரைவில் சுகாதார வளாகம்
பெருமாள் மலை சந்திப்பு பகுதியில் சுகாதார வளாகம் கட்டமைப்பு பணிகள் விரைவில் துவங்கும்.- -கண்ணன், ஊராட்சி தலைவர், அடுக்கம். --------------------------------------செட் அமைக்க கோரிக்கை
வேடசந்துார் பஸ் ஸ்டாண்டில் கட்டடம் வசதி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.- -கருப்புசாமி, வேடசந்துார். விரைவில் நடவடிக்கை
மாற்று ஏற்பாடுகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..- -மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார்.