உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரத்தில் முருங்கை விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.16 க்கு விற்றதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி ஜவ்வாதுபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது பல இடங்களில் முருங்கை அறுவடை மும்முரமாக நடக்கிறது. இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து கணிசமாக அதிகரித்தது. இம்மாத தொடக்கத்தில் செடி முருங்கை கிலோ ரூ.40க்கு விற்ற நிலையில் விலை தொடர்ந்து குறைகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.24 க்கு விற்றது. இது மேலும் குறைவடைந்து நேற்று ரூ.16க்கு விற்றது. முருங்கைக்காயை செடிகளிலிருந்து பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ