உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல்..

அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல்..

வேடசந்துார்: வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே அ.தி.மு.க., சார்பில் பொதுமக்களின் நலன் கருதி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனியம்மாள், நகர செயலாளர் பாபுசேட் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். பங்கேற்ற மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி, நீர்மோர், சர்பத் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,பழனிச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் புஷ்பா, நகர பேரவை செயலாளர் ஆறுமுகம், நகரப் பொருளாளர் கதிர்வேல் பங்கேற்றனர்.ஒட்டன்சத்திரம்: அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், நகரச் செயலாளர் நடராஜ், ஒன்றிய செயலாளர்கள் என்.பி. நடராஜ்,பி.பாலசுப்பிரமணி, அப்பன் கருப்புசாமி, முருகேஷ், மாவட்ட பொருளாளர் பழனிவேல், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், கீரனுார் பேரூர் செயலாளர் குப்புசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ராஜசுந்தர செல்வன், நகர ஜெ., பேரவை செயலாளர் குப்புசாமி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காமாட்சி ராஜா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை