உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வங்கியின் அலட்சியம்; கண்ணீர் விடும் பென்ஷன் தாரர்கள்

வங்கியின் அலட்சியம்; கண்ணீர் விடும் பென்ஷன் தாரர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள வங்கியில் பென்ஷன்தாரர்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்யாமல் இழுத்தடித்ததால் முதியவர்கள் பலர் அழுதபடி சென்றனர்.திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் திருவள்ளுவர் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்படுகிறது. இதில் நேற்று நுாற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள் அழுதபடி நின்றிருந்தனர். 'ஆண்டிற்கு ஒருமுறை சமர்ப்பிக்கப்படும் வங்கியின் சம்பிரதாய செயலான பென்ஷன்தாரர்களின் 'லைவ்' சான்றிதழை மூன்று மாதத்திற்கு முன்பே சமர்ப்பித்து விட்டோம். அதை உரிய இடத்தில் சேர்ப்பதில் வங்கி அலட்சியம் காட்டுகிறது. இதற்காக எங்களது வாழ்வாதாரமான மாத பென்ஷன் தொகை வரவில்லை. எப்போது வரும் என தெரியாது என்ற ரீதியில் வங்கி பணியாளர்கள் பதிலளிக்கின்றனர். இதன் மன உளைச்சலில் என்ன செய்வதென்று புரியவில்லை' என கண்ணீருடன் முதியவர்கள் கூறினர்.வங்கி கிளை மேலாளர் சந்திரகாந்தை சந்திக்க முயன்றபோது , அவரது அறையில் ஏ.சி., மின்விசிறி ஓடியபோதும் யாரும் இல்லை என்ற பதிலே வங்கி ஊழியர்களிடமிருந்து வந்தது.

மனதளவில் சக்தியில்லை

ஜோஸ்பின் ஸ்டெல்லா, பென்ஷன்தாரர், கல்லுப்பட்டி: பென்ஷன்தாரர்களுக்கான லைவ் சான்றதழ் உரிய முறையில் உடனடியாக சமர்ப்பித்தும் தற்போது வரை பென்ஷன் பணம் ஏறவில்லை என வங்கி நிர்வாகம் கூறுகிறது. தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளதால் எங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றால் அபராதம் என்ற போர்வையில் அவர்கள் பன்மடங்கு பணம் எங்களிடம் வசூலிப்பதை தவிர்க்க முடியாது. இதை கூறினால் வங்கி ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்காமல் விரட்டுகின்றனர். வயதான காலத்தில் இப்படியான மனஉளைச்சலை தாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை. உரிய முறையில் உடனடியாக எங்கள் பென்ஷன் பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KR india
மே 03, 2024 11:56

ஐஓபி வங்கியில் சேவை குறைபாடு இருந்தால், பென்ஷன்தாரர்கள் எஸ்பிஐ வங்கிக்கு அல்லது வேறு வங்கிக்கு பென்ஷன் கணக்கை மாற்றுவதற்கு சுலபமான வழி ஏற்படுத்தித் தர வேண்டும் வீட்டில் இருந்தவாறே மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்தி முக அங்கீகாரம் / பயோ-மெட்ரிக் மூலம், ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக லைப் சர்டிபிகேட் தரவிறக்கம் செய்வது எப்படி என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் அல்லது அருகிலுள்ள ஆதார் சேவை மையம் அல்லது கணினி சேவை மையத்தில் ரூபாய் செலுத்தி அந்த சேவையை பெற்று தர வசதி ஏற்படுத்தி தர வேண்டும் பென்ஷன் பணம், ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் விழுமாறு செய்ய வேண்டும் ஏடிஎம் மூலம் எடுத்து கொள்ளட்டும் மத்திய / பொதுத் துறை அரசு ஊழியர்களின் அலட்சியம் சம்பந்தப்பட்ட சேவை குறைபாடாக இருந்தாலும், மாநில அரசு ஊழியர்களின் அலட்சியம் சம்பந்தப்பட்ட சேவை குறைபாடாக இருந்தாலும், பாதிக்கப் படும், சாமானியர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக குரல் கொடுக்கும் தினமலருக்கு ஒரு சல்யூட் பென்ஷன் கிடைக்காமல் அல்லாடி வந்த, வயது முதிர்ந்த பென்ஷன் தாரர்களுக்கு, நம்மாலான உதவி செய்வோமே என்ற நல்ல நோக்கத்தில், ஐஓபி திண்டுக்கல் கிளை மேனேஜரிடம், விளக்கம் கேட்க முயற்சித்த நிருபரின் பணி மிகவும் பாராட்டுக்குரியது ஐஓபி வங்கி மற்றும் அரசின் காதுகளில், வயது முதிர்ந்த பென்ஷன் தாரர்களின் அழுகுரல் கேட்கிறதா?


angbu ganesh
மே 03, 2024 09:57

பென்ஷன் தாரர்களை டென்ஷன் தாரர்களாக்குகின்றனர், ஐஓபி வங்கி உண்மையில் வாடிக்கையாளர்களை ரொம்ப அலட்சியமாகத் தான் நடத்துகின்றனர், பொதுவாகவே இது அணைத்து வங்கியிலும் நடக்குது, சரியாக செக்கில் என்ன அமௌன்ட் இருக்குதுன்னு கூட கவனிக்காம rs/- தொகையை ரூ /- நெனச்சு, insufficient amount ன்னு எங்களது அலுவலக செக்கை திருப்பினார்கள், இது வங்கியின் அலட்சிய தன்மையை காட்டுது ஆனால் வாடிக்கையாளர்கள் இல்லேன்னா இவனுங்களுக்கு ஏது சம்பளம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை