உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் ஸ்டாண்டில் இல்லை நிழற்கூரை வெயிலில் பரிதவிக்கும் பயணிகள்

பஸ் ஸ்டாண்டில் இல்லை நிழற்கூரை வெயிலில் பரிதவிக்கும் பயணிகள்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் போதிய நிழற்கூரை இல்லாது பயணிகள் வெயிலில் தத்தளிக்கும் நிலை தொடர்கிறது.மதுரை, ராமநாதபுரம், துாத்துக்குடி ,திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் ஒட்டன்சத்திரம் வரை பழநி செல்லும் பஸ்களில் ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்திறங்கி, திருப்பூர் கோவை செல்லும் பஸ்களில் பயணிப்பது அதிகம். மேலும் ஒட்டன்சத்திரம் வழியாக பழநி, உடுமலை, பொள்ளாச்சி வழியாகவும் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தினமும் 400க்கு அதிகமான பஸ்கள் இங்கு வந்து செல்லும் நிலையில் நுாற்றுக்கணக்கான பயணிகள் வெளி ஊர்களுக்கு செல்ல தினமும் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு வசதி என்பது அறவே இல்லை.ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கிழக்குப் பகுதியில் டவுன் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. மேற்குப் பகுதியில் வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. பழநி ,தாராபுரம் வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் மேற்குப்புற சுற்றுச் சுவரை ஒட்டி நிறுத்தப்படுகிறது. இப்பகுதியில் நிழற்கூரை வசதி கிடையாது. வெயிலால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.மழை வந்தாலும் இதே நிலையே தொடர்கிறது . இங்குள்ள இலவச சிறுநீர் கழிப்பறைகளும் சுகாதாரக்கேடுடன் உள்ளது. பஸ் வரும் வரை காத்திருக்கும் பயணிகள் அவதிபடுகின்றனர்.பஸ்ஸ்டாண்ட் மேற்குப்பகுதி சுற்றுச் சுவரை ஒட்டி நிழற்கூரைகள் அமைப்பது அவசியமாகிறது பஸ்களையும் ஒதுக்கப்பட்ட ரேக்குகளில் நிறுத்தினால் வயதானவர்கள், பெண்கள் நடைமேடைமீது சுலபமாக நடந்துசென்று பஸ் படிக்கட்டில் ஏறிச்செல்ல வசதியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை