உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாசனத்திற்காக பாலாறு பொருந்தலாறு அணை திறப்பு

பாசனத்திற்காக பாலாறு பொருந்தலாறு அணை திறப்பு

பழநி: பழநி பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.பழநி பகுதி பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகளுக்கு மழையால் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. பாலாறு-பொருந்தலாறு அணையில் நீர் இருப்பு நேற்று ( 65 அடி) 38 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 31கன அடி நீர்வரத்து இருந்தது.இதை தொடர்ந்து அக். 10 வரை 120 நாட்களுக்கு தாடாகுளம் கால்வாய் இரண்டாம் போக பாசனத்திற்கு 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் புதச்சு, பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள 501 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.அணைதிறப்பில் பழநி தாசில்தார் சக்திவேலன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர் சங்கரநாராயணன், தாடாகுளம் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை