உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழனி ரோப் கார் சேவை ஆடி காற்றால் பாதிப்பு

பழனி ரோப் கார் சேவை ஆடி காற்றால் பாதிப்பு

பழனி:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு செல்ல வின்ச், ரோப் கார், படிப்பாதை வசதிகள் உள்ளன. ரோப்காரில் மூன்று நிமிடங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியும். காற்றின் வேகம் அதிகரித்தால் ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இயங்காத வகையில் அதில் பாதுகாப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.தற்போது ஆடி காற்று பலமாக வீசுவதால், அடிக்கடி ரோப்கார் சேவை பாதிக்கப்படுகிறது. அந்த நேரங்களில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப் கார் நிறுத்தப்படுகிறது. நேற்று அதிக நேரம் வீசிய பலத்த காற்றால், ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பக்தர்கள் படிப்பாதை, வின்ச் சேவையை பயன்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை