உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநிக்கு வெடிகுண்டு மிரட்டல் முக்கிய பகுதிகளில் சோதனை

பழநிக்கு வெடிகுண்டு மிரட்டல் முக்கிய பகுதிகளில் சோதனை

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரில் வெடிகுண்டு மிரட்டல் தகவலையடுத்து ரயில்வே ஸ்டேஷன் உட்பட பல்வேறு இடங்களில் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.பழநி முருகன் கோயிலுக்கு கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் மார்ச் 18 ரயிலில் வந்த போது ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சிலர் பேசிக்கொண்டிருந்ததாக பக்தர் ஒருவர் ரயில்வே தலைமை அலுவலகத்திற்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் துாய மணி வெள்ளைச்சாமி, ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பிளாட்பாரங்கள், ரயில் பாதை, பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடந்தது.பங்குனி உத்திரம் திருவிழாவுக்காக பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் நிலையிலும் கோயில் அடிவாரம், நகரின் முக்கிய பகுதிகளில் மோப்பநாய் ராக்கி, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் சோதனை நடந்தது. பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளதால் பக்தர்கள் அச்சப்பட வேண்டியதில்லை என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை