உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்வாரியத்தை கண்டித்து மறியல்

மின்வாரியத்தை கண்டித்து மறியல்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் உடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைத்து தர கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர்.தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் மின்கம்பம் உடைந்து எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் மாற்றி தர மீண்டும் வலியுறுத்தினர். இதன்பின்பும் கண்டுக்கவில்லை . இதனை கண்டித்து கிராம மக்கள் வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.இது போல் முறையாக குடிநீர் வழங்கக் கோரியும் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை