உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் கட்டுமான பணியில் புதையலா ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் கேள்வி

கோயில் கட்டுமான பணியில் புதையலா ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் கேள்வி

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கட்டுமான பணியின் போது தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடைத்த கற்சிற்பம், துாண்களுடன் புதையல்கள் ஏதும் கிடைத்து அதனை கோயில் நிர்வாகம் மறைக்கிறதா என ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராமரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் அருகே நடக்கும் கட்டுமான பணிகள் போது கற்சிற்பங்கள், கல்துாண்கள் கிடைத்தது. இது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கற்சிற்பங்களின் புகைப்படங்களோடு கோயிலுக்கு வந்த ஹிந்த தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கோயில் நிர்வாகத்திடம் அளித்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலிருந்து 50 மீட்டர் தொலைவிலுள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கருப்புசுவாமி கோயிலுக்கு பின் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக குழிகள் தோண்டியபோது, பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.நாயக்கர் காலத்தை சேர்ந்த இந்த சிற்பங்கள், தெய்வத் திருமேனிகள், கல்துாண்கள் கிடைத்துள்ளது. மீட்கப்பட்ட சிலைகள், கல்துாண்கள் உள்ளிட்ட விவரங்களை செயல் அலுவலர் உரிய முறையில் உயர் அதிகாரிகள், அரசுக்கு தெரிவிக்கவில்லை. குடமுழுக்கு முன் இடிக்கப்பட்ட கோயிலில் இருந்த சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கதகவுகள், கல்துாண்கள் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்த விவரங்களும் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். பள்ளம் தோண்டும்போது தங்கம், வெள்ளி, வைடூரியம் உள்ளிட்ட புதையல் ஏதும் கிடைத்ததா என்பது குறித்த முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.பள்ளம் தோண்டும் போது சிசிடிவி கேமராவில் பதிவானதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். பழைய கோயிலின் பொருட்கள் காணவில்லை என்பது பக்தர்களின் கேள்வியாக உள்ளது. இதன் மீது முழுமையான ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை