உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நான்கு சிறுவர்கள் மீட்பு

நான்கு சிறுவர்கள் மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நாகர்கோவில்- கோவை ரயில் வந்தது. சோழவந்தானிலிருந்து ஒரு பாட்டி 3 பேரன்களோடு பயணித்தார். சிறுவர்கள் தண்ணீர் பிடிக்க இறங்கினர். ரயில் சென்றதால் சிறுவர்கரால் ஏறமுடியவில்லை. பாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியோடு திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் 3 சிறுவர்களையும் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மகாராஷ்டிரா லோக் மணிக் திலக் பகுதியிலிருந்து வந்த திருநெல்வேலி ரயிலில் சேலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் வீட்டில் சண்டையிட்டு தனியாக வந்தார். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !