உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டரி சங்க பதவியேற்பு விழா

ரோட்டரி சங்க பதவியேற்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க 49 வது ஆண்டு பதவியேற்பு விழாவில் புதிய தலைவராக புருசோத்தமன்,செயலாளராக சந்திரசேகரன் பதவியேற்றனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஆனந்த ஜோதி, தாமோதரன், சுந்தரராஜன், குப்புசாமி, ரெத்தினம், அரசன் சண்முகம், ரமேஷ் பட்டேல் பங்கேற்றனர். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 10,12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அப்சனா, அத்திகா, கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சையது அலி பாத்திமா, சேவுகம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ்,அகரம் மேல்நிலைப்பள்ளி மாணவி அபர்னா கார்த்திகா, மாணவர் விஜய் ஆகியோருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. சிறந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை