உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி ஐ.டி., ஊழியரிடம் ரூ.17 லட்சம் மோசடி

பழநி ஐ.டி., ஊழியரிடம் ரூ.17 லட்சம் மோசடி

திண்டுக்கல்:பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் எனக்கூறி திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியரிடம் ரூ.17 லட்சம் மோசடி நடந்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பழநி தேரடி வீதியை சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியர் விக்னேஷ். வீட்டிலிருந்தபடி வேலை செய்கிறார். இவர் அலைபேசிக்கு 2 மாதங்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்யுங்கள். நீங்கள் செலுத்தும் முதலீடு பணத்தை இரட்டிப்பாக்கி திருப்பி தருகிறோம் என அவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய விக்னேஷ் அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.17 லட்சம் அனுப்பினார். ஆனால் அந்த நபர் தெரிவித்தபடி நீண்ட நாட்களாகியும் பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை. சந்தேகமடைந்த விக்னேஷ் பணத்தை திரும்பி தரும்படி கேட்டுள்ளார்.உஷாரான அந்த நபர் அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்தார். பணத்தை பறிகொடுத்த விக்னேஷ் திண்டுக்கல் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ.,லதா மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ