உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்பந்து அணிக்கு விடுதி மாணவியர் தேர்வு

கால்பந்து அணிக்கு விடுதி மாணவியர் தேர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 7,8,9,11ம் வகுப்பு விளையாட்டு விடுதி மாணவிகளுக்கான மாநில கால்பந்து போட்டிகளுக்கான தேர்வு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் நோயலின் ஜான் தலைமையில் நடந்த இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். தேர்வு குழு உறுப்பினர்களான நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, சர்வதேச கால்பந்து வீராங்கனை சாலினி, பயிற்றுனர்கள் சத்யா, சத்தீஸ்குமாரி, கலையரசி, மில்சியா பங்கேற்றனர்.விடுதி மாணவியர் சேர்க்கையில் மாவட்ட அளவில் தேர்வு பெற்றவர்கள் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க பயிற்சியளிக்க பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை