உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதித்த சேரன் வித்யாலயா பள்ளி

சாதித்த சேரன் வித்யாலயா பள்ளி

சின்னாளபட்டி, : சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 17 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை படைத்து வருகிறது.இப்பள்ளி மாணவர்கள் 109 பேர் இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றதன் மூலம் தொடர்ந்து 18 வது ஆண்டாக இச்சாதனை படைத்துள்ளனர். மாணவி கேத்தரின் ரிக்ஸி 583 மதிப்பெண்களுடன் முதலிடம், மாணவி ஜி.யுவஸ்ரீ, 600க்கு 581 மதிப்பெண்களுடன் 2ம் இடம் ,மாணவி பி.வர்ஷா 557 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பெற்றார். 550 மதிப்பெண்களுக்கு மேல் 8,500 மதிப்பெண்களுக்கு மேல் 45 பேர் பெற்றுள்ளனர். சாதனை மாணவர்களை சேரன் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.சிவக்குமார், முதல்வர் என்.திலகம் பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ