உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் தற்கொலை முயற்சி

போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் தற்கொலை முயற்சி

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் யுவராஜ் குமார் 29, கழிப்பறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் குமார் 29. இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் விசாரணைக்காக வடமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு கழிப்பறைக்குள் சென்றவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதை கொண்டு கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை