உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீர்த்தக்காவடியுடன் வந்த காளைகள்

தீர்த்தக்காவடியுடன் வந்த காளைகள்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு தீர்த்த காவடியுடன் வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் காளைகளையும் அலங்கரித்து அழைத்து வந்தனர்.இக்கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைந்த போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். பாதயாத்திரையாக வந்தவர்கள் முருகனுக்கு நேர்ந்து விடப்பட்ட நாட்டு காளைகளையும் மலர்களால் அலங்கரித்து அழைத்து வந்தனர். இந்த காளைகளுக்கு விவசாயம், போக்குவரத்து வேலைகள் எதுவும் அளிப்பதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை