உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பழநி பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆக.15ல் சிறப்பு பூஜைகளுடன் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று மாலை ஸ்ரீதேவி,பூதேவி, அகோபில வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு பவளக்கால் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று பாரிவேட்டை, நாளை (ஆக. 23 ) தேரோட்டம் நடக்கிறது . ஆக. 24ல் கொடியிறக்குதல், ஆக. 25 ல் விடையாற்றி உற்ஸவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ