உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்று இடம் கோரி வியாபாரிகள் வழக்கு

மாற்று இடம் கோரி வியாபாரிகள் வழக்கு

பழநி: திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு விற்பனையாளர் தொழிலாளர் சங்கம் செயலாளர் ஜெயசீலன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவல வீதியில் சங்க உறுப்பினர்கள் போக்குவரத்திற்கு இடையூறின்றி வியாபாரம் செய்தனர். சாலையோர வியாபாரிகள் என அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வேறு வாழ்வாதாரம் இல்லை. இவர்களை ஜன.,5 ல் கோயில் நிர்வாகம் அப்புறப்படுத்தியது. தேவஸ்தானம் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு கலெக்டர், பழநி நகராட்சி கமிஷனர், கோயில் இணைக் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி 8 வாரங்கள் ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை