உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரை வழிமறித்து பெண்ணிடம் செயின் பறித்த இருவர் கைது

டூவீலரை வழிமறித்து பெண்ணிடம் செயின் பறித்த இருவர் கைது

நத்தம் : -மதுரை மாவட்டம் அழகர்கோவில்- நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர் 25. இவரது மனைவி சிட்டம்மாள் 21. இருவரும் டூவீலரில் ஜூலை 18 மாலை நத்தம் அருகே கொரசின்னம்பட்டி சென்று ஊருக்கு திரும்பனர். பள்ளபட்டி பிரிவில் சென்ற போது பின்னால் மற்றொரு டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், ராமர் ஓட்டி சென்ற டூவீலரை வழிமறித்தனர். அவர்களை மிரட்டிய இருவரும் சிட்டம்மாள் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பினர்.நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ.,க்கள் விஜயபாண்டியன், கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி .,கேமரா பதிவுப்படி ஆய்வு செய்தனர். திருட்டில் ஈடுபட்டது மதுரை அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த சேதுபதி 23, மதுரை புதுாரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். சேதுபதி மீது 5 திருட்டு வழக்கு , 1 கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை