உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாளையம் விநாயகர் கோயில், பால சமுத்திரம் அய்யம்பள்ளி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் முதற்கால வேள்வி பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது. இரண்டாம் வேள்வி பின் யாக பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் எடுத்துவர கும்பாபிஷேகம் நடந்தது. பழநி கோயில் பண்டிதர் அமிர்தலிங்க குருக்கள், அர்ச்சக ஸ்தானிகர் செல்வ சுப்பிரமணியம் குருக்கள் நடத்தினர். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி, கோயில் அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கந்த விலாஸ் பாஸ்கரன், சாய் மருத்துவமனை சுப்புராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்