உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவேகானந்த பள்ளி ஆண்டு விழா

விவேகானந்த பள்ளி ஆண்டு விழா

பண்ணைக்காடு : பண்ணைக்காடு விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 38 வது ஆண்டு விழா நடந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன தலைவர் சுவாமி சுத்தானந்த தலைமை வகித்தார். செயலாளர் சுவாமி சத்யானந்த முன்னிலை வகித்தார். சுவாமி பரமானந்த, சுவாமி அக்சரானந்த, பள்ளி செயலர் சுவாமி கங்காதரனந்த பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடந்தது. அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி