உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 6 வயது சிறுவன் கொலையில் தொழிலாளிக்கு ஆயுள்

6 வயது சிறுவன் கொலையில் தொழிலாளிக்கு ஆயுள்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சின்னையம்பட்டியில் 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நத்தம் கோட்டையூர் சின்னையம்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி அஜய் ரத்தினம் 22. இவரது உறவினர் வித்யா. இணையதளத்தில் வெளியான ஒரு படம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் வித்யா புகாரளித்தார். அந்த புகைப்படத்தை பதிவிட்டது அஜய்ரத்தினம் என தெரிந்ததால்வித்யா வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும் வித்யா மீது அஜய்ரத்தினம் ஆத்திரத்தில் இருந்தார். 2021ல் வித்யாவின் 6வயது மகனை மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்ற அஜய்ரத்தினம் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜரானார். அஜய் ரத்தினத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ