உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள்; தி.மு.க.,வினரை குழப்பிய பலகை

ஒரு துறைக்கு 2 அமைச்சர்கள்; தி.மு.க.,வினரை குழப்பிய பலகை

திண்டுக்கல், : திண்டுக்கலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உணவு பொருள் வழங்கல் துறைக்கு 2 அமைச்சர்கள் உள்ளதாக சக்கரபாணி எம்.எல்.ஏ., செந்தில் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்த நல திட்ட பெயர் பலகை தி.மு.க.,வினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது .அடியனுாத்து, தோட்டனூத்து, சிறுமலை, ஏ வெள்ளோடு ஊராட்சிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள், வீட்டுமனை பட்டா வழங்கும் விழா ,புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல்லையடுத்த பொன்னகரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. அந்த பகுதியில் ஒரு பள்ளியின் சுவரை ஒட்டியவாறு மேடை அமைக்கப்பட்டு விழா நடந்தது. இதற்கான பல திட்ட பெயர் பலகையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் அருகில் குறிப்பிடப்பட்டிருந்த பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் அடுத்து உணவு வழங்கல் துறை அமைச்சர் என குறிப்பிடபட்டிருந்தது. இது ,கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது .இதை பத்திரிகையாளர்கள் படம் எடுக்க , பலகையில் தவறாக குறிப்பிட்டிருந்ததை கண்ட விழா ஏற்பாட்டாளர்கள் பலகையை மூடி மறைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை