உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புடலையில் குளவியை கட்டுப்படுத்த புதிய யுக்தி

புடலையில் குளவியை கட்டுப்படுத்த புதிய யுக்தி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே பருமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கராசு முருங்கை மரத்தில் ஊடுபயிராக புடலங்காய் பயிரிட்டுள்ளார். புடலையில் அதிக அளவில் குளவி தாக்குதல் இருப்பதால் போதிய விளைச்சல் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். இதனை கட்டுப்படுத்த அவர் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். புடலங்காய் பயிரிட்ட பகுதியில் ஆங்காங்கே மஞ்சள் கலரில் ஒரு கூடு போல் தயார் செய்து மாத்திரைஒன்றை அதில் பொருத்தினார். பெண் குளவி அந்தக் கூட்டுக்குள் இருந்தால் உண்டாகும் வாசனையைப் போல் அந்த மாத்திரையில் இருந்து வாசனை பரவும். இந்த வாசனையால் ஈர்க்கப்பட்ட ஆண் குளவிகள் கூண்டுக்குள் நுழையும். அங்கு வைக்கப்பட்டுள்ள மாத்திரையை முகர்ந்த உடன் ஆண் குளவிகள் உயிரிழந்து விடும். இதனால் இனவிருத்தி தடைபட்டு ஓரளவுக்கு அவற்றை கட்டுப்படுத்த முடிகிறது. இந்த முறையால் குளவி தாக்குதலில் இருந்து புடலையை பாதுகாப்பதோடு நல்ல விளைச்சலும் கிடைக்கிறது.போதுமான விலையும் கிடைக்கிறது.விவசாயி தங்கராசு கூறியதாவது: மூன்று ஆண்டுகளாக முருங்கையுடன் ஊடுபயிராக புடலையை பயிரிட்டு வருகிறேன். குளவி தாக்குதல் காரணமாக போதுமான மகசூல் பெற முடியாமல் தவித்து வந்தேன். இந்நிலையில் இனக்கவர்ச்சி மாத்திரை மூலம் குளவிகள் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை