உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பட்டா, நிலம் கிடைத்தும் வீடு கட்ட முட்டுக்கட்டை மன உளைச்சலில் பயனாளிகள்

 பட்டா, நிலம் கிடைத்தும் வீடு கட்ட முட்டுக்கட்டை மன உளைச்சலில் பயனாளிகள்

வேடசந்துார்: கல்வார்பட்டி ஊராட்சியில் இலவச வீட்டு மனை திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு தலா 2 சென்ட் நிலம் ஒதுக்கி உள்ளனர். ஆனால் இலவச தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட 3 சென்ட் நிலம் தேவை என்பதால் வீட்டுமனை பெற்ற பயனாளிகள் தொகுப்பு வீடுகளை பெற முடியாமல் பத்து ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். வேடசந்துார் கரூர் நெடுஞ்சாலையில் ரங்கமலை கணவாய் அருகே உள்ளது கல்வார்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள வெள்ளைக்காரடு பகுதியில் கோலார்பட்டியை சேர்ந்த 100 பயனாளிகளுக்கு தலா 2 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. 2012ல் திண்டுக்கல்லில் இதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. இரண்டு சென்ட் நிலத்தில் தொகுப்பு வீடுகள் கட்டலாம் என்பதால் இரண்டு சென்ட் அளவிற்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டாவை பெற்ற மக்கள் அப்போது வீடுகளை கட்டாமல் அப்படியே பாதுகாப்பாக வைத்து விட்டனர். தற்போது வீடுகளை கட்டலாம் என்ற நோக்கில் தொகுப்பு வீடுகளை கேட்டு செல்லும் பயனாளிகளுக்கு வீடுகளை கட்ட 3 சென்ட் நிலம் தேவை என்கின்றனர். இதனால் வீடுகளை கட்ட முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மக்கள் பயன்பெற அனைத்து பட்டாக்களையும் கேன்சல் செய்து தலா மூன்று சென்ட் நிலம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். பயனாளி செல்வன் கூறுகையில்,'' தற்போது வைத்துள்ள 2 சென்ட் வீட்டுமனை பட்டாவை வைத்து இலவச தொகுப்பு வீடுகளை கூட பெற முடியவில்லை. வீடு கட்டலாம் என நினைத்தும் வீடு கட்ட முடிய வில்லை. வெறும் பட்டாவை கையில் வைத்திருந்து என்ன செய்வது.மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்த பட்டாக்களையும் கேன்சல் செய்து 3 சென்ட் நிலம், பட்டாவை வழங்க வேண்டும்''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை