ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பி.ஜெயராமன் தலைமை வகித்தார். பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர்கள் ராம சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர்கள் கதலி நரசிங்கப் பெருமாள், ராஜேந்திரன், மீனாட்சி நித்திய சுந்தர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.கனகராஜ், எஸ்.கே.பழனிச்சாமி, பி.கருப்புச்சாமி, தனபாலன், கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், லீலாவதி, ராமதாசு, கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகரத் தலைவர் குமார் தாஸ், பிரசார பிரிவு மாநில பொறுப்பாளர் ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் ருத்திர மூர்த்தி, பல்வேறு பிரிவுகளின் மாவட்ட தலைவர்கள் கஜேந்திரன், சூரியமூர்த்தி, அங்குசாமி, கந்தசாமி, சுரேஷ் கவுசிக், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை மாவட்ட இணை அமைப்பாளர் ராஜலிங்கம், பல்வேறு பிரிவுகளின் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராஜ்,வினோத் குமார், பிரச்சார பிரிவு நகரத் தலைவர் மதன்ராஜ் மற்றும் மாநில, மாவட்டம், மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.