| ADDED : பிப் 22, 2024 06:17 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் சிலுவத்துார் ரோடு குளம்,கோபாலசமுத்திரக்கரை,முத்துச்சாமி குளம் உள்ளிட்ட குளங்களில் பொழுதுபோக்கிற்காக'போட்டிங்'விட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மக்கள் பொழுது போக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை,மாலை நேரங்களில் மக்கள் இங்கு சென்று நடை பயிற்சி,யோகா,மூச்சுப்பயிற்சி,உடற்பயிற்சி செய்து பொழுதை கழிக்கின்றனர். இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கி பராமரிப்பு பணியும் செய்கின்றனர். இந்நிலையில் நகரில் முத்துச்சாமி குளம், சிலுவத்துார் ரோடு குளம்,கோபாலசமுத்திரக்கரை உள்ளிட்ட குளங்களை சுற்றி மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தடுத்து பொது மக்கள் பொழுதை கழிக்கும் வகையில் குளங்களில்'போட்டிங்'விடுவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், திண்டுக்கல்: சிலுவத்துார் ரோடு குளம்,கோபாலசமுத்திரக்கரை,முத்துச்சாமி குளம் போன்ற குளங்களை தேர்வு செய்து 'போட்டிங்'விடுவதற்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததும் நிதி ஒதுக்கி பணிகள் துவங்கப்படும் என்றார்.