| ADDED : ஜன 17, 2024 12:57 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சின்னாளபட்டி சண்முகம் அறுவை சிகிச்சை, கருத்தரிப்பு மருத்துவமனைசார்பில் நடைபெறும் ஸ்ரீமதி கோப்பை 16 வயது பிரிவு கிரிக்கெட் லீக் போட்டியில் திண்டுக்கல் விக்னேஷ்ஸ்போர்ட்ஸ் பெண்கள் அணி வெற்றி பெற்றது. பி.எஸ்.என்.ஏ.மைதானத்தில் நடந்த போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 40 ஓவரில் 2 விக்கெட் இழந்து 283 ரன்கள் எடுத்தது. தீபன் 123, சஞ்சய் பாலாஜி 113(நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் சாய் புட்ஸ் சி.சி.அணி 28.5 ஓவரில் 82 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. யோகேஷ் 27ரன்கள், சித்தார்த் 5, ஷர்வின் 4விக்கெட் எடுத்தனர்.ஸ்ரீ.வீ. மைதானத்தில் நடந்த போட்டியில். ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ். அணி 32.2 ஓவரில் 63ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. அஷ்ரங்கா 4, ஐஸ்வர்யா, அபிநயா தலா 3விக்கெட்டுகள் எடுத்தனர். சேசிங்செய்த டி.டி.சி.ஏ., மகளிர் பிரிவு அணி 15.1 ஓவரில் 4விக்கெட் மட்டுமே இழந்து 64ரன்கள் எடுத்து வென்றது. ஆர்.வி.எஸ். மைதானத்தில் நடந்த போட்டியில் திண்டுக்கல். பிரசித்தி வித்யோதயா அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 232 ரன்கள் எடுத்தது. முகமது பஹீம் 87, தஷ்வின் 83(நாட்அவுட்) ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஆரஞ்சு கிரிக்கெட் அகாடமி 36.1 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. ராஜன் 25,சசிக்குமார் 56ரன்கள் எடுத்தனர்.போட்டியில் வீரர்கள் தீபன், சஞ்சய் பாலாஜி இருவரும் இந்த லீக் தொடரில் இரண்டு சதமடித்து சாதனை புரிந்தனர்.