உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டு கூடுக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லை; பணம் செலவழித்தும் பலனின்றி விவசாயிகள் அவதி

பட்டு கூடுக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லை; பணம் செலவழித்தும் பலனின்றி விவசாயிகள் அவதி

மாவட்டத்தில் பட்டு கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிகம் உள்ளனர். பட்டு வளர்ச்சி துறையின் கண்காணிப்பில் வழங்கப்பட்டு வரும் முட்டைகளில் தற்போது வீரியம் குறைபாடு உள்ள முட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. இதனால் புழு வளர்ப்பு எதிர்பார்த்த அளவு வெற்றியை தருவதில்லை. இளம்புழு வளர்ப்பு மையங்கள் தமிழகத்தில் 36 மையங்கள் உள்ளன. இவற்றில் கண்காணிப்பு இல்லாததால் அட்டவணைப்படி புழு வளர்ப்பு தொய்வு ஏற்பட்டுள்ளது. புழு வளர்ப்பு மையங்களில் சிறிய அளவில் புழு வளர்ப்பு நடைபெறுவதால் அங்கு சீதோஷ்ண நிலையை பாதுகாப்பது எளிது. ஆனால் புழு வளர்ப்பு மையத்தில் இருந்து விவசாயிகளிடம் பட்டுக்கூடு வளர்ப்பிற்கு வரும்போது அதற்கான சீதோஷண நிலை தாங்கும் அளவில் புழுக்கள் இருப்பதில்லை. எனவே குழு வளர்ப்பு மையத்தில் ஆய்வு செய்து தரமான இளம் புழுக்களை விவசாயிகளுக்கு வழங்க உறுதி செய்ய வேண்டும். 2024ல் இதே கால நிலையில் கிலோவுக்கு ரூ.500க்கு மேல் முதல் தர பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது முதல் தர பட்டுக்கூடு ஒரு கிலோவிற்கு ரூ.700க்கு மேல் விற்பனை ஆகிறது. இருந்தும் தகுந்த உற்பத்தி கிடைக்காததால் பணம் செலவழித்தும் பலனின்றி போனதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை