உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாய்கள் கடித்து ஆடுகள் பலி

நாய்கள் கடித்து ஆடுகள் பலி

குஜிலியம்பாறை : கூம்பூரில் தெரு நாய்கள் கடித்ததால் 30 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. கூம்பூர் ஊராட்சி எஸ்.புதூர், வெள்ளாளபட்டி, பிரேம்நகர், ஆட்டுக்காரன்பட்டி பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றுகின்றன. போதிய உணவு கிடைக்காத நிலையில், ஆடு, கோழிகளை பிடித்து உண்ண துவங்கியுள்ளன. இதனால் மக்களும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இரவில் ஆட்டு கிடைகளில், கும்பலாக புகும் நாய்கள் வேட்டையாடுகின்றன. நேற்று முன்தினம், வெள்ளாளபட்டி ராமலிங்கம் என்பவரின் கிடையில் புகுந்த நாய்கள், ஆறு ஆடுகளை கடித்ததால் பலியாகின. இதே பகுதியில் 30 ஆடுகள், ஒரு மாதத்தில் இறந்தன. இதே நிலை நீடித்தால், நாய்களுக்கு பயந்து, மக்கள், ஆடு, மாடுகள் வளர்ப்பதையே தவிர்க்கும் நிலை உள்ளது. இது குறித்து ராமலிங்கம் கூறுகையில், ''ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள கிடைகளில் புகும் நாய்களை விரட்டவே பயமாக உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி